PHI வேடம் …பிசிஆர் சோதனை நடத்துவதாக கூறி மயக்க மருந்து செலுத்தி கொள்ளை: கொரோனாவை வைத்தும் கொள்ளையடித்த கொடூரர்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

PHI வேடம் …பிசிஆர் சோதனை நடத்துவதாக கூறி மயக்க மருந்து செலுத்தி கொள்ளை: கொரோனாவை வைத்தும் கொள்ளையடித்த கொடூரர்கள்!


பொதுச்சுகாதார பரிசோதகர்களாக தம்மை காண்பித்து வீடு புகுந்து நகைத் திருட்டில் ஈடுபட்ட கும்பல் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மஹாவ பகுதியில் இந்த சம்பவம் நேற்று (29) மாலை நடந்தது.

மாலை 3.30 மணியளவில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் போல ஆடை அணிந்த 3 பேர், வீடொன்றிற்கு சென்றுள்ளது. அங்குள்ளவர்களிற்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்து, வாய் வழியாக மயக்க மருந்து வழங்கியுள்ளனர்.

வீட்டிலுள்ளவர்கள் மயக்கமடைந்ததும், வீட்டை சல்லடையிட்டு நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலையில் வீட்டுக்காரர்கள் மயக்கம் தெளிந்த பின்னர் அயலவர்களின் உதவியுடன் பொலிசாருக்கு அறிவித்தனர்.

இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இப்படியான ஏமாற்றுக்காரர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். பி.சி.ஆர் சோதனைகளுக்கான மாதிரிகளைப் பெறுவதற்கு முன்பு வாய்வழி மருந்து வழங்கப்படுவதிவில்லை என்பதை சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. பெருந் தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஒரு நேரத்தில் இதுபோன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு இரையாகிவிடக் கூடாது என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.