செயலிழந்தது PCR பரிசோதனை இயந்திரம் ! இருபதாயிரம் முடிவுகள் வெளி வருவதில் தாமதம் , இருண்டு போகிறது இலங்கை ! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

செயலிழந்தது PCR பரிசோதனை இயந்திரம் ! இருபதாயிரம் முடிவுகள் வெளி வருவதில் தாமதம் , இருண்டு போகிறது இலங்கை !


கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனையில் நிறுவப்பட்ட புதிய ஆய்வகத்தில் பி.சி.ஆர். இயந்திர செயலிழப்பு காரணமாக கிட்டத்தட்ட 20,000 பி.சி.ஆர்  சோதனை மாதிரிகளின் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

பி.சி.ஆர்.  அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஊரடங்கு உத்தரவு விதிப்பது உட்பட நோய் பரவுவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தீர்மானிப்பதில் கடுமையான சிக்கல் எழுந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் தடுப்பு நடவடிக்கை மையத்தில் சுகாதாரத் துறைகளின் தலைவர்களுக்கும் கோவிட் மையங்களின் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இத் தகவல் வெளியிடப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 250 மில்லியன் மதிப்புள்ள பி.சி.ஆர் உபகரணங்கள். கடந்த மே மாதம் முல்லேரியா மருத்துவமனையில் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டிருந்தாலும், இப்போது ஆறு நாட்களாக அது செயலற்ற நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

48 மணி நேரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.