நான் இந்த மண்ணில் பாதிக்கப்பட்ட அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனம் சார்பாக பேசுகிறேன் என் இனம் சார்பாக பேச நேரம் தாருங்கள் சிறீதரன் எம்பியை பேசவிடாமல் குறுக்கே பேசி குழப்பிய சிங்கள எம்பிக்கள்.
20ஆவது திருத்தம் மீதான விவாதத்தின் போது இன்றைய இருண்ட நாளை வரலாற்றின் கறுப்பு நாளை வாக்களிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் உணர்ந்து கொண்டு வாக்களியுங்கள் அது மீண்டும் நாளை உங்களை நோக்கியே மீண்டுவரும்
பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள மக்களை எண்ணி வேதனைபடுகிறேன்
நீங்கள் அனைவரும் சேர்ந்து தனி நபரிடம் கொடுக்கும் அதிகாரம் ஏனைய இனங்களை மதித்து இந்த நாட்டில் வாழும் பல்லினங்களின் பன்மைத்துவத்தை ஏற்று ஜனநாயக அடிப்படையில் தனது ஆட்சியை செய்வதற்கான சாதக தன்மையை இந்த சட்டம் கொடுக்குமா என உறுப்பினர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடா அல்லது இந்நாட்டில் வாழும் ஏனைய இனங்கள் மதங்கள் மதிக்கப்படுகின்ற ஒரு நாடா என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்
ஒருவரிடம் நீங்கள் ஆதிகாரத்தை கொடுக்குறீர்கள் இன்று ஓர் ஆபத்தான இருண்ட நாளாக பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் 10 வருடங்களின் பின்பு அல்லது 20 வருடங்களின் பிற்பாடு இந்த இலங்கை எவ்வாறான ஒரு இராணுவ சகதிக்குள் அல்லது இரத்த சகதிக்குள் இருக்கப்போகின்றதென்பதை வரலாறு தான் உங்களுக்கு சொல்லும்
நாங்கள் இந்த மண்ணிலே பாதிக்கப்பட்ட இனம் 70 வருடங்களுக்கு மேலாக இந்த மண்ணிலே நாம் இருப்புக்காக போராடுகின்ற இனம் எங்களுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடுகின்ற இனம் இழந்து போன இறமையை மீட்பதற்காக பேசுகின்ற இனம் தங்களுடைய சொந்த உறவுகளுக்கு விளக்கேற்றி வணங்க கூட தகுதி இல்லாத நிலையிலே வாழுகின்றேம் ஆகவே நாம் இந்த நாட்டில் வாழுகின்ற உரிமையை உடையவர்களாக இருப்போம் ஆனால் இந்த அதிகார குவிப்பு எங்களுக்கு மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்டிருந்தார்
பாராளுமன்றில் இன்று - 20ஆவது திருத்தம் மீதான விவாதத்தின் போது...
#ShritharanMP #Shritharan #Tamil #MP #parliament