Breaking News



ஏ 9 வீதியின் கைதடி பாலத்தில் வைத்து பெண் ஒருவரின் தங்கச்சங்கிலி சற்றுமுன் கொள்ளையர்களால் அறுக்கப்பட்டுள்ளது . 

அரச ஊழியரான குறித்த பெண் தனது மோட்டார்ச் சைக்கிளில் வீடு சென்று கொண்டிருந்த சமயம் பிறிதொரு மோட்டார்ச் சைக்கிளில் பின்தொடர்ந்த கொள்ளையர்கள் கைதடிப் பால வளைவில் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் . 

இதன் போது வீதியில் பயணித்தவர்கள் கொள்ளையர்களை பின்தொடர்ந்த போதும் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக அப்பகுதியிலுள்ளவர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்னர் . 

எனினும் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அவதானித்துள்ளனர் . இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததுடன் கொள்ளையர்களின் மோட்டார்சைக்கிள் இலக்கமான BTE 2986 யையும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர் .

No comments

Note: Only a member of this blog may post a comment.