தனது சொந்த வீட்டிலேயே திருடிய மகனை பிடித்து குடுத்த தாயார் – யாழில் சம்பவம் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தனது சொந்த வீட்டிலேயே திருடிய மகனை பிடித்து குடுத்த தாயார் – யாழில் சம்பவம்


தனது சொந்த வீட்டிலேயே திருடிய இளைஞனை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளனர். தாயார் கொடுத்த முறைப்பாட்டின அடிப்படையியிலேயே மகன் கைதானார்.

நெல்லயடி முடக்காடு பகுதியில ஆட்களற்ற வேளையில் வீட்டில் நகை, பணம் திருடப்பட்பட்டிருந்ததாக தாயார் ஒருவர் நெல்லியடி பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.

தான் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த வீட்டிலிருந்த 4 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அவரும், மகனும் மட்டுமே வீட்டில் வசிக்கும் நிலையில், சந்தேகத்தின் பேரில் மகனிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் அவரே திருட்டில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்தது.

திருடப்பட்ட பணம்,நகை என்பனவும் மீட்கப்பட்டன