Breaking News


பிரான்ஸில் கடந்த வாரம் தனது மனைவி, இரண்டு பிள்ளைகள், சகோதரியின் இரண்டு பிள்ளைகள் என 5 கொலை செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர், பிரான்ஸில் மனநல பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் தனிமையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் நொயிஸி-லெ-செக் (சீன்-செயிண்ட்-டெனிஸ்) இல் இந்த கொலை சம்பவம் நடந்தது.

மனநல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவரது குற்றவியல் பொறுப்பு குறித்து எந்தவொரு மனநல சோதனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அவரது கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

கத்தி மற்றும் சுத்தியலால், அவரது மனைவி, 18 மாதங்கள் மற்றும் 5 வயதுடைய அவரது இரண்டு குழந்தைகள், அத்துடன் 8 மற்றும் 11 வயதுடைய அவரது இரண்டு மருமகன்களையும் கொன்றார்.

பொலிஸ் விசாரணையில், தனது 18 மாதமான குழந்தையின் மூக்கு, வாயை பொத்தி, மூச்சு திணறடித்து கொன்றுள்ளார்.

அவரது சகோதரி மற்றும் மைத்துனர் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்களின் இரண்டு மூத்த பிள்ளைகளும் அதிக காயங்களுக்கு ஆளானார்கள்.

கழுத்து மற்றும் அடிவயிற்றில் பல சுய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர், முதற்கட்ட விசாரணையில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டார்.

உணவகம் ஒன்றில் இவர் பணியாற்றினார்

No comments

Note: Only a member of this blog may post a comment.