Breaking News



இன்று மாலை 4 மணியளவில் வல்லை முனியப்பர் கோயிலடியில் வடமராட்சி பசுமை நிழல் குழுவின் 10,000 மரம் நடுகைத் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது . குழுவின் தலைவர் செ.அச்சுதன் கற்பூரதீபம் ஏற்றிவைக்க வடமராட்சி தெற்கு மேற்கு தவிசாளர் த . ஐங்கரன் அவர்கள் முதலாவது மரத்தை நாட்டி மரம் நடுகையை ஆரம்பித்து வைத்தார் . வடமராட்சியை பசுமை வனமாக மாற்றி எதிர்கால சந்ததிக்கு கையளிக்கும் செயற்பாட்டை இலக்காகக் கொண்ட மேற்படி செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வில் கரணவாய் மேற்கு கிராம அலுவலர் உட்பட பல இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர் .



No comments

Note: Only a member of this blog may post a comment.