Breaking News


வரலாற்று பிரசித்தி பெற்ற சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயம் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் ஒருவர் ஆலய வளாகத்திலிருந்து நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (9) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மத தலங்களில் பக்தர்கள் பங்கேற்பதை 50 சதவீதமாக மட்டுப்படுத்த வேண்டும் என்று புத்தசாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சு நாடு முழுவதும் உள்ள அனைத்து மத தலங்களுக்கும் சிறப்பு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய். நோய் பரவாமல் தடுக்க பக்தர்கள் கொடுக்கப்பட்ட அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.