மாமனிதர் ரவிராஜின் மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மாமனிதர் ரவிராஜின் மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்!



கடந்த சில வருடங்களாகவே தென்மராட்சி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது . அருந்தவபாலன் வெளியேறிய பின்னர் , தென்மராட்சிக்கு ஒரு உடையாரைப் போல கே.சயந்தனை நியமித்து விட்டார் எம்.ஏ.சுமந்திரன் . ஒரு காலத்தில் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களிற்கு ஒரு செயற்பாட்டு வரலாறு இருந்தது . நீண்ட செயற்பாட்டின் பின்னர்தான் பெரும்பாலானவர்கள் கட்சியில் முக்கிய பங்கு வகிக்க முடிந்தது .

 இதில் 2010 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு சடுதியான மாற்றம் உண்டாகி விட்டது . இப்பொழுது அப்படியான செயற்பாட்டு பாரம்பரியமிக்க இளைஞர்களும் குறைவு . தலைவர்களும் இல்லை . ஒவ்வொரு தலைவரையும் அதிகமாக யார் விசுவாசிக்கிறார்களோ , அவர்கள் முன்னுக்கு வரலாம் . தென்மராட்சியில் பல செயற்பாட்டாளர்கள் இருந்தும் , சுமந்திரனை அதிகம் விசுவாசித்தார் என்ற தகுதியினால் சயந்தன் சாவகச்சேரி தொகுதி கிளை தலைவராகவும் ஆகி விட்டார் .

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தொகுதி கிளைகளிலேயே , முக்கிய பிரமுகர்கள் இல்லாமல் , நீண்டகால செயற்பாட்டாளர்கள் முக்கிய பாத்திரம் வகிக்காத ஒப்பீட்டளவில் பலவீனமாக கிளை சாவகச்சேரி . சயந்தனிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென சுமந்திரன் விரும்பியதால் , ஏனைய பிரதேசங்களை போல சாவகச்சேரியில் இன்னொருவரை வளர்க்க , வளர சுமந்திரன் விரும்பியிருக்கவில்லை . ஆனால் சசிகலா ரவிராஜ் கடந்த பொதுத் தேர்தில் களமிறங்கிய பின்னர் இந்த நிலைமையில் மாற்றம் உருவாகியுள்ளது .

 தென்மராட்சியின் கணிசமானவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள் . இதுவரை ஒதுங்கியிருந்த கட்சியின் தீவிர- மூத்த ஆதரவாளர்களும் அவரை ஆதரிக்கிறார்கள் . சசிகலாவும் செயற்பாட்டு பாரம்பரியத்தை கொண்டவரல்ல . ஆனால் , விக்னேஸ்வரன் தொடங்கி சசிகலா வரை இமேஜ் அரசியலை தமிழ் அரசு கட்சி கையாண்டு வருகிறது . ஆனால் தென்மராட்சியில் சசிகலாவை மக்கள் அங்கீகரித்தார்கள் . சாவகச்சேரி தொகுதி கிளையாக சசிகலாவின் பிரச்சார நடவடிக்கையில் ஒத்துழைக்காமல் , எம்.ஏ.சுமந்திரனை பிரதானமாகவும் , சி.சிறிதரனை பகுதியளவிலும் அவர்கள் பிரச்சாரப்படுத்திய சூழலில் , சசிகலா தென்மராட்சியில் அதிக விருப்பு வாக்கு பெற்றார் .

சசிகலாவின் வருகையுடன் தென்மராட்சியில் ஒரு உறைக்குள் இரண்டு வாள் நிலைமை . சயந்தன் தரப்பினருக்கு இது உவப்பாக இருக்காது . ஆனால் , கட்சியாக இது ஆரோக்கியமான நிலைமையே . கடந்த பொதுத்தேர்தலில் தனி ஆளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சசிகலா ரவிராஜ் , இனிமேல் அப்படி ஈடுபட தேவையிருக்காது . ஏனெனில் , தீவிரமாக செயற்படும் ஒரு மருமகன் அவருக்கு கிடைக்கிறார் . அது வேறு யாருமல்ல- கலையமுதன் மாவை சேனாதிராசா ! கடந்த பொதுத்தேர்தலில் மாவை சேனாதிராசாவிற்காக பிரச்சாரத்தில் கலையமுதன் மட்டும்தான் ஈடுபட்டார் . 

எம்.ஏ.சுமந்திரன் , சிறிதரன் தரப்பு மாவை தரப்பிலிருந்தவர்களையும் வளைத்துப் போட்டு தமக்கு மாத்திரம் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . இவைதான் மாவை சேனாதிராசா தோல்வியடைய பிரதான காரணம் . அப்போது , கலையமுதன் பம்பரமாக சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . கலையமுதனின் வருகையை குடும்ப அரசியல் என தமிழ் அரசு கட்சிக்குள் ஒரு தரப்பு விமர்சிக்கிறது . மாவையும் , கலையமுதனும் தந்தை மகன்தான் . ( செய்திகளை உடனுக்குடன் படிக்க தமிழ்பக்கத்தை பாருங்கள் ) ஆனால் , இன்றுள்ள தமிழ் அரசு



கட்சியின் இளைஞர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் ஒரு பிரதேசசபையையோ , மாகாணசபையையோ , நாடாளுமன்றத்தையே குறிவைத்து தமிழ் தேசிய வேடம் போட்டவர்கள்தான் . கிட்டத்தட்ட தசம வீதததை தவிர மிகுதி யாருக்கும் அரசியல் பன்மைத்துவ சிந்தனை கிடையாது . ஒப்பீட்டளவில் கலையமுதன் இவற்றில் விதிவிலக்கானவர் . உண்மையில் அந்த வகையானவர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் அரசு கட்சியை வளப்படுத்தும் . இப்பொழுது விடயம் என்னவென்றால்- மாவை சேனாதிராசாவின் புதல்வன் கலையமுதனும் , ரவிராஜ்- சசிகலா தம்பதியின் மகள் பிரவீனாவும் இல்லறத்தில் இணையவுள்ளனர் . அடுத்த மாதத்தின் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் திருமணம் நடக்கும் என தமிழ்பக்கம் அறிந்தது . காதலித்து , பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாம் அது ! தென்மராட்சி மருமகனாக கலையமுதன் செல்வது , சசிகலாவிற்கு கூடுதல் பலமாக இருக்கும் . புதுமண தம்பதிக்கு நாமும் வாழ்த்து கூறி விடுகிறோம் !