Breaking News


மொபைல் தொலைபேசி செயலிகளின் மூலமோ அல்லது குறிப்பு புத்தகமொன்றிலோ தமது நடமாட்ட விபரங்களை பொதுமக்கள் பதிவு செய்து வைத்துக் கொள்ளுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டால் அவரது நடமாட்டம், சந்தித்தவர்கள் பற்றிய விபரத்தை சுலமாக அறிந்து கொள்ள இந்த முறை உதவும் என கூறினார்.

மினுவாங்கொட தொற்றின்போது, அவர்களின் தடமறிய முயன்ற போது புதிய பிரச்சனையை எதிர்கொண்டதாக தெரிவித்தார். பலர் பயணம் செய்த விபரங்களை மறந்திருந்தனர்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களின் தொடர்பில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்படவில்லையென்றார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகைக்கு இயங்கும் பிற வாகன சாரதிகளிடம், பயணிகளின் தகவல் இல்லை என்று கண்டறியப்பட்டது என்றார்.

இதன் விளைவாக, முச்சக்கர வண்டிகள், வண்டிகள் மற்றும் பிற வாடகை வாகனங்களை செலுத்துபவர்கள், பயணிகள் பற்றிய தகவல்களை பேணும் ஒரு செயல்முறையை பேணுமாறு கோரியுள்ளார். யாராவது கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டால், அதன் தடமறிய இது உதவும் என்றார்.

வாடகை வாகனங்களில் யார் பயணித்தார்கள், எப்போது, ​​எங்கு ஏறினார்கள், இறங்கினார்கள் என்பதை பதிவு செய்ய ஒரு செயல்முறையை பேணுமாறு கேட்டுள்ளார்.

பொதுமக்களும் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை ஸ்மார்ட் போன் அல்லது குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“2 நாட்களுக்குப் பிறகு நீங்கள் எங்கு சென்றீர்கள் என்பது உங்களுக்கு நினைவில் இருக்காது. 7-8 நாட்களுக்கு உங்கள் நடமாட்ட பதிவுகள் உங்களிடம் இருந்தால் சிறந்தது” என்று அவர் கூறினார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.