மணிவண்ணனை கட்சியை விட்டு நீக்க இடைக்கால தடை: கஜேந்திரகுமாரை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மணிவண்ணனை கட்சியை விட்டு நீக்க இடைக்கால தடை: கஜேந்திரகுமாரை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!


அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து வி.மணிவண்ணனை நீக்கும் முடிவிற்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி வரை இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தன்னை கட்சியிலிருந்து நீக்கியது சட்டவிரோதமானது என தெரிவித்து, வி.மணிவண்ணன் தாக்கல் செய்த மனு மீதான கட்டளை இன்று வழங்கப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எதிரவரும் 11ஆம் திகதி அகில் இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர், மற்றும் பொ.கஜேந்திரகுமார் ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.