யாழில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடியபோது ஊர் மக்களால் மடக்கி பிடிப்பு; பிடித்து கொடுத்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்..!! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடியபோது ஊர் மக்களால் மடக்கி பிடிப்பு; பிடித்து கொடுத்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்..!!



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தென்னிலங்கையை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருநதது.அத்துடன் திடீர் சுகயீனம் காரணமாக மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் இன்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.அவர் மது அருந்தும் நோக்கில் தப்பி சென்றதாகவும் அப்பகுதி மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.எனினும் தப்பி ஓடிய நபரை மடக்கி பிடித்த ஊர் மக்கள் அவர்களுடன் தொடர்பினை பெநியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.