மீன் சாப்பிடுவது ஆபத்தானதா?: சுகாதார அமைச்சு விளக்கம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மீன் சாப்பிடுவது ஆபத்தானதா?: சுகாதார அமைச்சு விளக்கம்!


நன்கு சமைத்த மீன் ஊடாக கொரொனா பரவாது என்ற விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.

அதே வேளை, கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரனா காணப்படலாம் என்பதால் சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தினைக் கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.

மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாகப் பின்பற்றி மீன் சந்தைகளை தொடர்ந்து நடத்தலாம் என வலியுறுத்தப்படுகிறது.

விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறீதரன்