Breaking News


கடந்த அரசாங்கத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரின் உறவினர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னர் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த போது இதனை தெரிவித்தார்.

இதையடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரை வரவழைத்து, செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியதாகவும் மைத்திரி தெரிவித்தார்.

இராணுவம், பொலிசார் மீது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எச்.ஆர்.சி.எஸ்.எல் குறிப்பாக ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினரால் தெரிவித்ததாக அவர் கூறினார்.

“பொலிஸ் நிலையங்களில் மக்கள் துன்புறுத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த விடயங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முடிப்பதற்கு முன்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அந்ததகவல்களை வழங்கியது“ என்றார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக, இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஐ.நா அமைதிகாக்கும் படைகளில் சேர வாய்ப்பை இழந்துவிட்டனர். இது அந்நிய செலாவணியை சம்பாதிப்பதற்கான முக்கிய ஆதாரமாக இருந்தது.

“ஆகையால், நான் அப்போதைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரை வரவழைத்து அவர்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். இறந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும், இதுபோன்ற செயல்களைச் செய்தவர் அந்த நபர் என்றும் பின்னர் எனக்குத் தெரியவந்தது, ”என தெரிவித்தார்

No comments

Note: Only a member of this blog may post a comment.