ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் எழுத்துமூலமாக அறிவித்திருப்பதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டவரைவுக்கான விவாதம் இன்றைய தினமும் இடம்பெறுகின்றது. இந்நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதற்கிடையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டவரைவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. எனினும், அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவளிக்கமாட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன் போது 20ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்தே சில திருத்தங்களை முன்வைத்து, 20 இற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்தியகுழுக் கூட்டத்தின் பின்னர் சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேரர்கள் சிலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் எழுத்துமூலமாக அறிவித்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.

“19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்தவன் என்ற முறையில் மனச்சாட்சிப்படி 20 ஆவது திருத்தத்தை ஆதரித்து என்னால் வாக்களிக்க முடியாது” என அவர் அந்தக் கடிதங்களில் தெரிவித்திருக்கின்றார் என்றும் கூறப்படுகிறது