சீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

சீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை!


கொரோனா தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவுடன் சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் பரிசோதித்து வரும் கோவிட் தடுப்பூசிகளில் ஏதாவதொன்றை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை (என்.டி.ஆர்.ஏ) தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் சுமார் பத்து நாடுகள் தற்போது தடுப்பூசிகளை உருவாக்க ஆராய்ச்சி நடத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தயாரிக்கும் தடுப்பூசிகள் மருத்துவ நிலைக்கு அப்பால் மூன்றாம் கட்டத்தில் உள்ளன என்று தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் அசித டி சில்வா தெரிவித்தார். சீனா அல்லது பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி விரைவில் இலங்கையில் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், சீனத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி, உலக சுகாதார நிறுவன ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது 10 நாடுகளை சேர்ந்த 60,000 தன்னார்வலர்களுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளது.  கொழும்பிலுள்ள 125 சீனர்களும் அதை பரீட்சித்துள்ளனர்.

இதுவரை யாருக்கும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பவில்லை.  அவசர காலங்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் எல்லைக் காவலர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 610 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கிறது என்று சீனா கூறுகிறது. அந்த திறன் 2021 க்குள் ஒரு பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன மூத்த அதிகாரி யான் ஜீச்சி சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். அங்கு கோவிட் தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்து இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார்