Breaking News


பிசிஆர் பிரிசோதனை செய்யப்படாமல் இந்திய பிரஜையோ அல்லது குழுவொன்றோ மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலைக்கு வந்ததன் மூலமாகவே மீண்டும் இலங்கையில் கொரோனா பரவியதா கூறப்படுகிறது. இது உண்மையா என கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த கேள்வியெழுப்பினார்.

திவுலபிட்டிய பிரதேசத்தில் கொரோனா கொத்தணியின் பரவல் அதிகரித்துள்ளது. கொத்தணியில் இருந்து சமூக பரவலாக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பொழுது அடையாளம் காணப்பட்ட நபர் முதலாவது தொற்றாளர் அல்ல. யாருக்கு முதலில் தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் உருப்படியான பதிலை வழங்கவில்லை.

கடந்த ஜனவரியில் கொரோனா பரவல் குறித்து நாம் எச்சரிக்கை விடுத்தபோது, ஆளும் தரப்பினர் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர். கொரோனா தொற்று தடுக்கப்பட்டதாகவும், மக்கள்அச்சமடைய தேவையில்லையென்றும் தெரிவித்தனர். அப்படியானால், மீள எப்படி தொற்று ஏற்பட்டது?

பிசிஆர் பிரிசோதனை செய்யப்படாமல் இந்திய பிரஜையோ அல்லது குழுவொன்றோ மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலைக்கு வந்ததன் மூலமாகவே மீண்டும் இலங்கையில் கொரோனா பரவியதா கூறப்படுகிறது. இது உண்மையா என்பதை சுகாதார அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

மனுஷ நாணயக்கார எம்.பி தெரிவித்தபோது,

பரிசோதனை, தனிமைப்படுத்தல் நடவடிக்கை இல்லாமல் மத்தள விமான நிலையத்தின் மூலம இந்திய பிரஜைகள் பிரண்டெக்ஸ் நிறுவனத்திற்கு இந்திய பிரஜைகள் அழைத்து வரப்பட்டனர். அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஊடாகவே அவர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் இது குறித்து ஆராயுங்கள் என்றார்

No comments

Note: Only a member of this blog may post a comment.