விலை போன டயானா மீது நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

விலை போன டயானா மீது நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி!


அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த தேசிய பட்டியல் எம்.பி. டயானா கமகே மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கட்சியின் முடிவை புறக்கணித்து டயானா அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்தார், எனவே தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தேசிய பட்டியல் மூலம் டயானா நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தனது செயல்களால் முழு பெண் சகோதரத்துவத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றார்.

இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

20 வது திருத்தத்தை நிறைவேற்றுவது தற்போதைய அரசாங்கத்தின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கும் என்றும் கூறினார்.

புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கும், ஒரு குடும்பம் அதிகாரம் செய்வதற்கும், அமெரிக்க குடிமக்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கும் கொண்டுவரப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.