யாழ்ப்பாணம் திருநெல்வேலி – அரசடி வீதியில் வீடொன்றில் இருந்து விசேட அதிரடிப் படையினர் 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருநெல்வேலி அரசடிப் பகுதியில் உள்ள வீட்டில் வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாண விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரி அசோக் குமார் தலமையிலான குமுவினர் வீட்டினை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன்போது வீட்டில் இருந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது உடமையில் இருந்து 3 வாள்களை மீட்டதாக அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
மேலும் மீட்கப்பட்ட வாள்கள் மற்றும் சந்தேக நபரை கோப்பாய் பொலிஸாருடம் ஒப்படைத்துள்ளனர்
No comments
Note: Only a member of this blog may post a comment.