இப்பொழுது எமது மக்களுக்கு தேவை மக்களின் பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்கள் அல்ல மாறாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு எடுத்துக் கொடுப்பவர்களே என வந்தாறுமூலை கிராமத்தில் சோலை விவசாய நிலையத்தினை திறக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த பல வருடங்களாக எங்களது மாவட்டத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்து சட்டவிரோதமாக காடுகளை வெட்டுவது காணிகளை பிடிப்பது கால்நடைகளுக்கு அழிவை உண்டு பண்ணுவது போன்ற செயற்பாடுகள் கடந்தகாலம் முதல் இடம்பெற்று வருகின்றது. இவை புதிய செயற்பாடுகள் அல்ல குறிப்பாக இந்த மாவட்டத்திலே மாதவனை, மையிலத்தமடு போன்ற பகுதிகளில் ஆங்காங்கே இடம்பெற்று வந்திருக்கின்றது.
இது தொடர் நாங்கள் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் மகாவலியோடு சம்பந்தப்படுவதனால் அது சம்பந்தமாக அவருடன் பேசியிருந்தேன். அதன் பிற்பாடு நான் மகாவலி அதிகார சபைக்குச் சென்று இராஜாங்க அமைச்சரோடும் மகாவலி அதிகார சபையின் பணிப்பாளரோடும் கிட்டத்தட்ட நாற்பது நிமிடத்திற்கு மேல் இது தொடர்பாக கதைத்திருக்கின்றேன்.
அதே வேளை இப்பொழுது எமது மக்களுக்கு தேவை மக்களின் பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்கள் அல்ல, மாறாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு எடுத்துக் கொடுப்பவர்களே என தெரிவித்தார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.