Breaking News


இந்தியா மீனவர்களுடன் தொடர்பை பேணி, யாழ்ப்பாணத்திற்கு மஞ்சள் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதார அதிகாரிகள் வலைவீசி தேடுவதை அறிந்த ஒருவர் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிற்குள் தலைமறைவாக திரிந்ததால், புதிய சுகாதார நெருக்கடி எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தலைவிரித்தாடி வரும் நிலையில், கடல் எல்லை கடப்பது கொரோனா தொற்றை இலங்கைக்குள் கடத்தும் ஆபத்தான நடவடிக்கையாக அமையுமென்பதால் மக்கள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டுமென அரசும், உள்ளூர் நிர்வாகங்களும் தொடர்ந்த வலியுறுத்தி வருகின்றன. எனினும், அதை கருத்தில் எடுக்காமல் மக்களை ஆபத்தில் தள்ளும் நடவடிக்கையில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நேற்று அனலைதீவிற்கு மஞ்சள் கடத்தி வந்த இருவர் பற்றிய தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு ஒருவரை கைது செய்தனர்.

அதேநேரம், மற்றையவர் தலைமறைவாகி விட்டார்.

அவர் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நடமாடி திரிந்த நிலையில் இன்று காரைநகரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்துக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்து, அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அவர் காரைநகரில் அதிகமாக நடமாடியதால், உடனடியாக காரைதீவு லொக் டவுன் செய்யப்படும் வாய்ப்புமுள்ளது. அவர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, பிசிஆர் பரிசோதனை கிடைக்கும் வரை காரைநகர் லொக் டவுன் செய்யப்படுவது பற்றி ஆராயப்பட்டு வருகிறது.

அதேவேளை, அனலைதீவு லொக் டவுன் செய்யப்பட்டுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.