Breaking News


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான பிள்ளையானின் சொந்த ஊரான மட்டக்களப்பு பேத்தாழையில் பொலிசாரின் காட்டு மிராண்டி தனத்தினை பொறுக்க முடியாமல் மக்கள் பெரும் திண்டாட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பொலிசாரின் அத்துமீறலை பொறுக்க முடியாமல் இரவில் இளைஞர்கள் ஊரைவிட்டு வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயங்களை பிள்ளையானிடம் முறையிட்டும் எந்த பலனும் கிட்டவில்லையென்கிறார்கள். இந்த நிலையில், அவருக்கு ஏன் வாக்களித்தோம் என இப்பொழுது சிந்திப்பதாக கிராம மக்கள் பகிரங்கமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை இப்பிரதேசத்தில் இம்முறை இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனையும் ஆதரித்து மக்கள் வாக்களிப்பு செய்தனர். அவரிடம் குறித்த விடயம் தொடர்பாக பல முறை தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வருகை தருமாறு ஆதரவாளர்கள் கேட்டபோதிலும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விடயம் பற்றி கூறுகிறேன் என தொலைபேசி அழைப்பு எடுக்கும் சகலருக்கும் பதில் கூறிக்கொண்டே இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடயம் தொடர்பாக அறிவித்தால் “நாங்கள் வரமாட்டோம். எங்களுக்கா வாக்களித்தனர். ஆளும் கட்சிக்கே வாக்களித்தனர். நாம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தமாட்டோம்“ என கைவிரித்துள்னர்.

பொலிசார் இரவில் புகுந்து அடிக்கிறார்கள் என்று மனித உரிமைக் குழுவில் முறையிட்டால், அவர்கள் இதுவெல்லாம் சகஜம். அப்படி அடிக்கிறார்களா. மறுபடியும் அடிக்கும்போது தொலைபேசி அழைப்பினை எடுங்கள் நாங்கள் பொலிசாரிடம் ஏன் அடிக்கின்றீர்கள் என கேட்கின்றோம் என தம்மை மக்களை அலைக்களிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இறுதியில் பூனைக்கு மணி கட்டுபவர்கள் யார் என்ற கேள்வியுடன் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட மக்களாக பேத்தாழை கருங்காலிச்சோலை மக்கள் உள்ளனர்.

இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் பிரதேசத்தில் உள்ளதொரு ஆலயம் ஒன்றில் நேர்த்திக்கடனுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆடுகள் எங்கே என்று கேட்டதும் கணக்கறிக்கை தொடர்பாக எழுந்த முரண்பாடும், நீதி கேட்டதுமே இவ் நிலமைக்கு காரணம்.

கடந்த 3 மாதங்களாக இடம்பெற்று வந்த குறித்த விடயமானது வெட்டுக் குத்து கைகலப்பு என்று தொடங்கி ஊர்கலவரமாகி இறுதியில் பொலிசாருக்கும் ஊர் மக்களுக்கும் இடையில் கலவரமாகி பொலிஸ் வாகனம் கால்லால் தாக்கப்பட்டு கண்ணாடி உடைக்கபடுவது வரை வளர்ந்தது. துப்பாக்கி சூடு நடாத்தி கலவரத்தினை அடக்கி விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு கலகம் அடக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் பொலிசாருடன் இணைந்து பொதுமக்களை தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். தற்போது பொலிசார் பழிதீர்க்கும் படலத்தை நாளுக்குக் நாள் ஒவ்வொரு இரவிலும் அரங்கேற்றி வருகின்றனர்.

கலவரத்தில் பங்கு கொண்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கல்குடா பொலிசார் பிராயத்தனம் செய்கின்றனர். இப்பிரச்சினையினை தீர்ப்பதற்கு பிரதேசத்தில் எந்தவொரு அரசியல் தலைமைத்துவமும் இல்லை. இவ் நிலமைக்கு காரணம் வாழைச்சேனை பிரதச செயலக கலாச்சார உத்தியோகஸ்த்தர்கள் பிரதேச செயலாளர் மற்றும் கல்குடா பொலிசார் ஆகும் என பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்தகால ஆலய நிர்வாகத்தில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்த பொருளாலர் தொடர்பான பிரிவினருக்கு பக்கச்சார்பாக நடந்து கொண்டமையேயாகும் என சம்பந்தப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
பிரச்சினையை தீர்த்து வைக்கமால் நிர்வாகம் செய்தமையே காரணம் எனக் கூறப்படுகிறது.
இரு கோஸ்டியினருக்கு கடந்த 12.10.2020 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் பலர் கைது செய்யப்படும் நிலமை உள்ளது.ஊரில் பலர் தலை மறைவு. ஊறங்கிய நிலையில் அச்சத்தில் மக்கள் உணவு உணவு உறக்கம் இன்றி உள்ளனர்.குறித்த சம்பவத்திற்கு நீதி கேட்டு பிரதேச மக்கள் நாட்டின் ஜனாதிபதி பெதலிஸ்மா அதிபரி மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை சமர்ப்பித்துள்னர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.