கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது-உலக சுகாதார அமைப்பு - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது-உலக சுகாதார அமைப்புநடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் விநியோகம் செய்தாலும் இந்த காலப்பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகள் சிலர் மேற்கொண்ட விசேட ஆய்வின் பின்னரே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகின்ற வசந்தகால பகுதியில் கொரோனா வைரஸ் மனித உடலில் வாழ்வதற்கான வசதிகள் அதிகம் காணப்படுவதே இதற்ககு காரணம் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வைரஸை முழுமையாக அழிப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்க வேண்டும் என பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், கொரோனா தொற்றுக்கு எதிராக 200க்கும் அதிகமான தடுப்பூசிகள் உலகளவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க குறைந்தது ஒரு வருட காலம் தேவைப்படும் என அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.