கொரோனா சோதனை சிரமமேயில்லை: தனக்குத்தானே பரிசோதித்து வீடியோ வெளியிட்ட சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கொரோனா சோதனை சிரமமேயில்லை: தனக்குத்தானே பரிசோதித்து வீடியோ வெளியிட்ட சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்!


சில மாதங்களின் முன்னர் வரை சிங்கப்பூரில் கொரொனா தொற்று தாண்டவமாடிய நிலையில், தற்போது அதை பெருமளவிற்கு அந்த நாட்டு அரசு கட்டுப்படுத்தி விட்டது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சிங்கப்பூரின் நடவடிக்கைகளில் ஒன்று- அதிக பரிசோதனை.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை வரவேற்க சிங்கப்பூர் விரைவில் தனது எல்லைகளைத் திறக்கும் என்ற சமீபத்திய அறிவிப்புடன், சிங்கப்பூருக்கு வருபவர்கய் கொரோனா நோயாளிகள் இல்லை என்பதை முடிந்தவரை உறுதிசெய்ய விரைவான சோதனைகளை சிங்கப்பூர் பயன்படுத்துகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பேஸ்புக் வீடியோ மூலம், கோவிட் -19 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் மூலம் சோதனை செயல்முறையை வெளியிட்டு, கொரோனா பரிசோதனைக்கு செல்பவர்களின் பீதியை போக்கியுள்ளார்.

இதேவேளை, வரும் டிசம்­பர் இறு­திக்­குள் சிங்­கப்­பூ­ரில் உள்ள எல்லா பொதுக் கூடங்­க­ளி­லும் டிரேஸ்­டு­கெ­தர் கருவி அல்­லது டிரேஸ்­டு­கெ­தர் கைபே­சிச் செயலி கட்­டா­ய­மா­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வேலை­ இ­டங்­கள், பள்­ளிக்கூடங்­கள், கடைத்­தொ­கு­தி­கள், உண­வ­கங்­கள் போன்­ற­வற்­றுக்கு இவற்­றில் ஏதா­வது ஒன்று அவ­சி­ய­மா­கும்.

டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப் என்ட்ரி பதிவை அனு­ம­திக்­கும் புதிய முறை இம்­மா­தம் முதல் கட்­டம் கட்­ட­மாக விரி­வு­ப­டுத்­தப்­படும் என கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு தெரி­வித்துள்ளது.

இந்த புதிய அம்­சங்­க­ளைப் பற்­றிய சிறு குறிப்புகள் இங்கு அளிக்­கப்­ப­டு­கின்றன. தற்­போது ‘க்யூ­ஆர்’ குறி­யீட்டை கைபேசி கேமரா மூலமோ சிங்­பாஸ் செயலி மூலமோ ‘ஸ்கேன்’ செய்து சேஃப் என்ட்ரி பதிவை மேற்­கொள்­கி­றோம். திறன் கைபேசி இல்­லா­த­வர்­கள் தங்­க­ளது அடை­யாள அட்­டை­யில் உள்ள ‘பார்­கோட்’ மூலம் சேஃப் என்ட்­ரிக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள். டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப் என்ட்ரி பதிவு முறை அறி­மு­கம் கண்ட பின்­னர் இவை எது­வும் தேவைப்­ப­டாது.

அடுத்­த­தாக, டிரேஸ்­டு­கெ­தர் செய­லி­யில் சேஃப்என்ட்ரி க்யூ­ஆர் குறி­யீட்டை ‘ஸ்கேன்’ செய்­வ­தற்­கான வசதி உள்­ளீடு செய்­யப்­பட்டு இருக்­கும். அத­னையே இனி பயன்ப­டுத்த வேண்­டும்.மாறாக, டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யில் உள்ள க்யூ­ஆர் குறீ­யீட்­டை­யும் பொதுக் கூடங்­க­ளுக்­குள் நுழைய ஸ்கேன் செய்­ய­லாம்.

தற்­போது சேஃப்என்ட்ரி பதிவு முறை நடப்­பில் உள்ள எல்லா பொது இடங்­க­ளி­லும் டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப் என்ட்ரி முறை அறி­மு­கம் செய்­யப்­படும்.

டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப்என்ட்ரி எப்­போது முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­பது பற்­றி­யும் தெரிந்­து­கொள்­ள­லாம். அதி­கப்­ப­டி­யான பொது­மக்­கள் ஈடு­படும் நட­வ­டிக்­கை­கள் நிக­ழும் கூடங்­களில் இப்­போது முதல் நவம்­பர் நடுப்­ப­குதி வரை அறி­மு­கம் செய்­யப்­படும். திரை அரங்­கு­களில் வரும் திங்­கட்­கி­ழமை (அக்­டோ­பர் 26) முதல் அது தொடங்­கும்.

நூறு பேருக்கு மேல் பங்­கேற்­கும் வழி­பாட்­டுச் சேவை­கள் போன்­றவை நிக­ழும் இடங்­க­ளுக்­கும் இது விரி­வு­ப­டுத்­தப்­படும். தொடர்ந்து, நாட­ளா­விய கூடங்­கள் அனைத்­தி­லும் டிசம்­பர் இறு­திக்­குள் டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப்என்ட்ரி முறை அறி­மு­கம் செய்­யப்­பட்­டு­வி­டும்.

டிரேஸ்­டு­கெ­தர் கருவி பொது­மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கிறது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி, 38 சமூக நிலை­யங்­களில் அல்­லது வெவ்­வேறு கடைத்­தொ­கு­தி­களில் அமைக்­கப்­பட்டு உள்ள 13 நட­மா­டும் கூடங்­களில் இவற்­றைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். வசிக்­கும் பகு­தி­யில் உள்ள இடங்­க­ளில்­தான் இவற்­றைப் பெற­வேண்­டும் என்­ப­தில்லை. கருவி வழங்­கப்­படும் இடங்­க­ளைப் பற்­றிய முழு­வி­வ­ரத்தை TokenGoWhere இணை­யப் பக்­கத்­தில் காண­லாம்.

நவம்­பர் மாத இறு­திக்­குள் தீவில் உள்ள எல்லா 108 சமூக நிலை­யங்­க­ளி­லும் இக்­க­ருவி கிடைக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் ஏழு வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தி­னர் அனை­வ­ரும் டிரேஸ்­டு­கெ­தர் கருவி அல்­லது செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­வது அவ­சி­யம்