யாழ் மாநகரசபை உறுப்பினர் மயூரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வி.மணிவண்ணன் ஆதரவாளர்களை களையெடுக்கும் கட்சியின் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே மயூரன் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ கடிதம், கட்சியின் செயலாளரினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மணிவண்ணனின் தீவிர ஆதரவாளரான அவரை கட்சியை விட்டு நீக்க காரணம் தேடிக் கொண்டிருந்த முன்னணிக்கு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அவரின் பேஸ்புக் பதிவொன்று காரணமாக கிடைத்தது.
வாக்களிப்பது ஜனநாயக உரிமை என பொருள்படும் அறிஞர் ஒருவரின் கூற்றை அவர் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் பகிர்ந்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் என்றாலே அது பகிஸ்கரிப்புத்தான் என்ற கொள்கையுடைய கட்சியிலிருந்து கொண்டு, வாக்களிக்கும் உரிமை பற்றி எப்படி கதைக்க முடியுமென கேட்டு, அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.