காரணமேயில்லாமல் தன்னை கட்சியை விட்டு நீக்கியதாக யாழ் மாநகரசபை உறுப்பினர் ம.மயூரன் தாக்கல் செய்த வழக்கு, இன்று (23) விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
வி.மணிவண்ணனை தேசிய அமைப்பாளர், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, மணிவண்ணன் ஆதரவாளர்களையும் கட்சி மற்றும், உள்ளூராட்சி மன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கி வருகிறது.
இதனப்படையில், யாழ் மாநகரசபை உறுப்பினர் ம.மயூரனையும் கட்சி, மாநரசபை உறுப்புரிமையிலிருந்து தமிழ் காங்கிரஸ் நீக்கியது.
தன்னை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிராக அவர் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (22) வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது