உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று காத்தான்குடியில் மீட்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் விசேட சிஐடி குழுவினர், கடந்த வெள்ளிக்கிழமை (16) காத்தான்குடியில் வாகனத்தை கைப்பற்றினர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 2019-04-25 அன்று கைதான ஒருவரின் பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் தற்போது மொனராகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
No comments
Note: Only a member of this blog may post a comment.