திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், சாதாரண பிரஜை ஒருவரும் தலைமை மேசையில் அமர்ந்திருந்தமை அதிகாரிகள் மத்தியில் விசனம் ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை (15) இடம்பெற்றது. இணைத்தலைவர்களான கிழக்கு ஆளுனர் அநுராதா யம்பத், நாடாளுமன்ற உறுப்பின் கபிலநுவான் அத்துகோரள தலைமை தாங்கினர்.
இதன்போது தலைமை மேசையில் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் என்ற பெயரில் கோமரங்கடவல திருகோணமலை மாவட்ட பௌத்த சாசன செயலாளர் தேவானந்த தேரர், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் என சாதாரண பிரஜையான நிமல் காமினி என்பவரும் அமர்ந்திருந்தனர்.
தலைமை மேசையில் அரச அதிபர், இணைத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களே அமர்வது சம்பிதாயம். எனினும், சம்பிரதாயத்தை மீறி இவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தது, பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், பொதுஜன பெரமுனவின் கபிலநுவான் அத்துகோரள ஆகியோர் தெரிவாகியிருந்தனர். இரா.சம்பந்தன், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை
No comments
Note: Only a member of this blog may post a comment.