இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் பெரும் களேபரம்: கரவெட்டி தவிசாளர் ஐங்கரன் உள்ளூராட்சி உறுப்புரிமையை துறந்தார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் பெரும் களேபரம்: கரவெட்டி தவிசாளர் ஐங்கரன் உள்ளூராட்சி உறுப்புரிமையை துறந்தார்!


யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தனது உறுப்புரிமை மற்றும் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள கரவெட்டி பிரசேத சபையின் தவிசாளராக கடந்த தேர்தலில் ஐங்கரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்தும் தாம் விலகுவதாக திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை அலுவலகமான மார்ட்டின் வீதி அலுவலகத்தில் இன்று தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில், கரவெட்டி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் முன்னாள் தவிசாளர் வியாகேசு, கடந்த முறை தவிசாளர் பதவிக்கு தீவிரமாக முயன்ற பரஞ்சோதி இருவரும், தவிசாளர் ஐங்கரன் மீது குற்றம்சுமத்தினர். கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பின்னர் ஐங்கரன் தவிசாளர் ஆனது தொடக்கம், இருவரும் பிரதேசசபையில் குழப்பங்களையே ஏற்படுத்தி வந்தனர்.

பதவி கோரி இந்த குழப்பங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்றைய கூட்டத்திலும், குழப்பத்தில் ஈடுபட்ட இருவரும், தமது சமூகத்தை சேர்ந்தவர்களிற்கு ஐங்கரன் முன்னுரிமையளிக்கவில்லையென குற்றம்சாட்டினார்.

இது தொடர்பில் ஐங்கரனின் நிலைப்பாட்டை மாவை சேனாதிராசா வினவியபோது, வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டு, டிசம்பர் 1ஆம் திகதியே தனது பிரதேசசபை உறுப்புரிமை, தவிசாளர் பதவியை துறப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் அந்த இடத்திலேயே பதவிவிலகல் கடிதத்தை தயாரித்து கொடுத்துள்ளார்

பின்னர் தெரிவித்தாட்சி அலுவலருக்கும் பதவிவிலகல் கடிதத்தை இன்றை தினமே அனுப்பி வைத்தார்.