அறிஞரின் கருத்தை பகிர்ந்தமையால் மேலுமொரு யாழ் மாநகரசபை உறுப்பினர் நீக்கம்: மணிவண்ணன் வேட்டையை தொடரும் தமிழ் காங்கிரஸ்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

அறிஞரின் கருத்தை பகிர்ந்தமையால் மேலுமொரு யாழ் மாநகரசபை உறுப்பினர் நீக்கம்: மணிவண்ணன் வேட்டையை தொடரும் தமிழ் காங்கிரஸ்!


யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து மேலுமொரு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நீக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆதரவாளர்களை கட்சியை விட்டே நீக்கும் நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முதலில் மணிவண்ணனை கட்சியை விட்டும், மாநகரசபை உறுப்புரிமையிலிருந்தும் தமிழ் காங்கிரஸ் நீக்கியது. காங்கிரசின் அறிவித்தலின் அடிப்படையில், மணிவண்ணனின் மாநகரசபை உறுப்புரிமை வறிதாகியதாக, யாழ் மாநகரசபை தெரிவித்தாட்சி அலுவலர் நேற்று கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்னொரு மாநகரசபை உறுப்பினரான ம.மயூரனின் மாநகரசபை உறுப்புரிமையும் வறிதாகியதாக, தெரிவத்தாட்சி அலுவலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அவர் தேர்தல் காலத்தில், வாக்களிக்கும் உரிமையை குறிப்பிடும் அறிஞர் ஒருவரின் வாக்கியத்தை பேஸ்புக்கில் பகிர்ந்தார் என காரமணம் கூறப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.