விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது பிரித்தானிய மேன்முறையீட்டு விசாரணை ஆணைக்குழு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது பிரித்தானிய மேன்முறையீட்டு விசாரணை ஆணைக்குழு!


பிரிட்டனில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் மேன்முறையீட்டை விசாரிக்கும் ஆணைக்குழுவால் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கப்படும்.

புலிகள் மீதான தடை நீக்க கோரிக்கையை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென வாதிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகரீதியாக செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது