யாழில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் கொழும்பிலிருந்து வந்தவர்களே! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

யாழில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் கொழும்பிலிருந்து வந்தவர்களே!


யாழ் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொழும்பிலிருந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

உடுவில் அம்பலவாணர் வீதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தாயும், மகளும் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் இருந்து வந்தவர்கள். அவரது கணவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் கர்ப்பிணியான மனைவியும், மகளும் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்திருந்தார்.

அதேவேளை, யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர், வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல உணவகமான யாழ் ஹொட்டல் உரிமையாளர் ஆவார். அவரது ஹொட்டலில் பணியாற்றிய புங்குடுதீவை சேர்ந்த இருவரும், வேலணையை சேர்ந்த ஒருவரும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

மட்டக்களப்பில் பேலியகொட கொத்தணியை தவிர்ந்து, அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கொழும்பிலிருந்து வந்தவர்களே.

கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்தில் கொரோனா அபாய வலயங்களில் இருந்து பிற இடங்களிற்கு வந்து தங்கியுள்ளவர்கள் குறித்து பொதுமக்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.