ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்!


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துரையாடியுள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றுமாலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வட கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லைப்புற காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவது மற்றும் மயிலத்தமடு, மாதவனை பிரதேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.

அத்துடன், அத்துமீறிய சிங்கள குடியேற்றம், கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் காரணமாக தனது சிறப்புரிமை மீறப்பட்ட விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது