வவுனியா மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய அ. சகிலாபானு பதவி உயர்வுடன் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் குமுது பெரேராவால் இந் நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பணியாற்றிய இவர் வவுனியா விவசாய கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பண்ணையில் பெருமளவு மோசடியுடன் நட்டத்தில் இயங்குவதாக கணக்கு காண்பிக்கப்பட்டு வந்த நிலையில் சகிலா பானு பதவியேற்ற பின்னர், வவுனியா பண்ணையை இலாபமீட்டும் வெற்றிகமான பண்ணையாக்கினார். அங்கு இடம்பெற்ற மோசடி பற்றிய விபரங்களை, வடக்கு விவசாய திணக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார்.
எனினும், மோசடியில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக, திறமையான அதிகாரியான சகிலா பானுவை வெளியேற்றும் முயற்சியில் வடக்கு விவசாய திணைக்களம் ஈடுபட்டது. உயரதிகாரிகளின் துணையுடன் அவரை வெளியேற்ற முயற்சிக்கப்பட்ட போதும், அவர் பதவி உயர்வுடன் மீண்டும் வடக்கில் நியமனம் பெற்றுள்ளார்.
வடக்கு விவசாய திணைக்களத்தில் இருந்து திறமையான அதிகாரிகளை வெளியேற்றி விட்டு குண்டுச்சட்டியில் குதிரையோட்டும் முயற்சியில் வடக்கு விவசாய திணைக்களம் இனியும் ஈடுபட கூடாது என்பது பொதுவான எதிர்பார்ப்பு
No comments
Note: Only a member of this blog may post a comment.