நாடாளுமன்றத்தில் அமைச்சர் விமல் வீரவன்சா மீது தாக்குதல் நடத்த ஆளுந்தரப்பு எம்.பி ஜெயந்த கட்டகொட இன்று முயன்றதாக தேசிய சுதந்திர முன்னணி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
20 வது திருத்தத்தில் இடம்பெறும் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்தது.
இது தொடர்பில் விமல் வீரவன்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளார். இரட்டை குடியுரிமை விவகாரம் இருந்த போதிலும், தமது கட்சியின் உறுப்பினர்களை வாக்களிக்க அவர் வற்புறுத்தி வருவதாகவும் விமல் முறையிட்டுள்ளார்.
இந்த சர்ச்சையையடுத்து, விமல் வீரவன்சவை தாக்க எம்.பி. ஜெயந்த கட்டகொட முயன்றதாகவும், இது மற்ற எம்.பி.க்களால் தவிர்க்கப்பட்டது என்றும் தேசிய சுதந்திர முன்னணி ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி. ஜெயந்த கட்டகொட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது