தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, சீறும் புலி என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக்கப்படுகிறது.
தேசிய விருது வென்ற நடிகர் பொபி சிம்ஹா இந்த திரைப்படத்தில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ஏற்கனவே நீலம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த ஜீ.வெங்கடேஷ்குமார் இயக்குகிறார்.
முன்னதாகவே அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Breaking News
New
பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியாகவுள்ள 'சீறும் புலி' திரைப்படம்
admin