ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை போட்ட நபர் திடீர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் உலக நாடுகள் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை போட்ட நபர் திடீர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் உலக நாடுகள்


ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனையில் பங்கேற்ற பிரேசில் நாட்டவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி இருந்தது.

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேசில் நாட்டில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த நபரின் வயது 28 ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை. தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரேசிலில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உலகெங்கிலும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இந்தியா, அவுஸ்திரேலியா என அனைத்து நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடாக ரஸ்யா விளங்குகின்றது. “ஸ்புட்னிக்” என 2 தடுப்பூசிகளை ரஸ்யா உருவாக்கியுள்ளது.

எனினும் எல்லா தடுப்பூசிகளையும் விட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கும் தடுப்பூசியையே அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள். மிகவும் நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அண்மையில் பக்கவிளைவுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட குறித்த பரிசோதனைகள் அதற்கான தீர்வினை கண்டறிந்து மறுபடியும் தமது பணியை தொடர்ந்தது.

இவ்வாறான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனற செய்தி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கும் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது