லண்டனில் வெடித்தது போராட்டம் -பொலிஸாருடனும் மோதல் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

லண்டனில் வெடித்தது போராட்டம் -பொலிஸாருடனும் மோதல்


இஸ்லாமியர்கள் தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம் வெடித்தது

சார்லி ஹெப்டோ கார்ட்டூன்கள் குறித்த இமானுவேல் மக்ரோனின் நிலைப்பாடு தொடர்பாக பிரெஞ்சு தூதரகத்திற்கு வெளியே லண்டனில் 'நபி மரியாதை' கோரி இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் வெடித்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் தீர்க்கதரிசியை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்', 'பூமியின் மிகப்பெரிய பயங்கரவாதி மக்ரோன்' மற்றும் 'அவமதிப்பு பேச்சு சுதந்திரமாகாது' என்ற பதாகைகளை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நபிகள் நாயகத்தினை கேலிச்சித்திரமாக சித்தரித்ததன் விளைவாக தொடங்கிய பிரச்சினை சமீபத்தில் பிரான்ஸின் நைஸ் நகரில் மூன்றுபேர் ஆயுதம் தாங்கிய நபர் தொடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாமிய வன்முறைக்கு முற்றுப்புள்ளி தேவையென அந்நாட்டு பிரதமர் கூறியிருந்ததும், சார்லி ஹெப்டோ கார்ட்டூன்கள் குறித்து அவரின் நிலைப்பாடு தொடர்பாகவும் பல்வேறு நாடுகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில், பிரான்ஸ் பிரதமரை பேயாக சித்தரித்தும், அவரது புகைப்படத்தில் பூட்ஸ் அடிச்சுவடு பதிவிட்டிருப்பதைப்போலவும் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் அமைதியாக கலைந்து சென்ற நிலையில் மூவர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து ஆப்கான், இந்தியா, வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியாவில் மக்ரோன் உருவப்படங்களை இணைத்து போராட்டங்கள் நடைபெற்றன.