இன்று வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

இன்று வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ!


அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று (27) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகிறார்.

மைக் பொம்பியோ நாளை வரை நாட்டில் தங்கியிருப்பார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் மைக் பொம்பியோ உயர்மட்ட கலந்துரையாடலை நடத்துவார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் புதிய அரசின் காலத்தில் வரைமுறையில்லாமல் அதிகரித்து செல்வது தொடர்பான அமெரிக்காவின் கவலைகளை பொம்பியோ இதன் போது வெளிப்படுத்துவார்.

நேற்று இந்தியாவில் உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்திய பின்னர், இன்று இலங்கை வருகிறார் பொம்பியோ. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான போக்கை இந்தியாவும் கொண்டிருப்பதால், ஒரு புதிய சர்வதேச நெருக்கடியை இலங்கை எதிர்கொள்வதற்கான முதலாவது நகர்வாக பொம்பியோவின் வருகை கணிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த மிக உயர்ந்த அமெரிக்க பிரமுகர் மைக் பொம்பியோ ஆவார்.