லண்டன் தமிழ் குடும்பத்தின் கொலையில் திடுக்கிடும் தகவல்; பச்சிளம் குழந்தைக்கு இத்தனை கொடூரமா?
கடந்த 6ம் திகதி லண்டனை உலுக்கிய கொலை தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 42 வயதாகும் குகா சிவராஜ் தனது 3வயது மகன் கைலாஷை முதலில் தூக்கில் போட்டு கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அதன் பின்னரே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு. பிணங்களோடு 2 வாரம் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர்களது நண்பர்கள் பலர் அவரை தொடர்பு கொள்ள முற்பட்டும் முடியவில்லை.
பின்னர் உறவினர் ஒருவர் நேரடியாகச் சென்று வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் ஒரு பதிலும் இல்லை. இதனை அடுத்து அந்த நபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் கூச்சல் சத்தம் கேட்டதாக அயலவர்கள் கூறியிருந்த புகார். அனைத்தையும் வைத்தே பொலிசார் அங்கே சென்று அவர்களது வீட்டு கதவை உடைக்க முயன்றபோது குகா சிவராஜ் தன்னை தானே கத்தியால் குத்தி நிலத்தில் சரிந்தார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இவர் இரவு வேளைகளில் கூச்சலிடுவதும் அந்த 2 வாரங்களாக இடம்பெற்று வந்ததாக அயலவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.