கொலைக்குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்ற மகஜருக்கு தான்வழங்கிய ஆதரவிலிருந்து விலகிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
மனோ கணேசன் உள்ளிட்ட சில சிறுபான்மையின கட்சிகளின் எம்.பிக்களும் இந்த மகஜரில் கையெழுத்து வைத்தது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது முன்னைய முடிவிலிருந்து விலகுவதாக மனோ கணேசன் அறிவித்துள்ளார்.