மணிவண்ணனுடன் இணைந்து செயற்பட கூடாது: காங்கிரஸ் தலைமை உறுப்பினர்களிற்கு கடிதம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மணிவண்ணனுடன் இணைந்து செயற்பட கூடாது: காங்கிரஸ் தலைமை உறுப்பினர்களிற்கு கடிதம்!


சட்டத்தரணி வி.மணிவண்ணனுடன் இனிமேல் யாரும் இணைந்து செயற்பட கூடாது என மணிவண்ணன் ஆதரவாளர்களிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்ட பின்னர் அவரது ஆதரவாளர்களை உள்ளூராட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்க அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொ.கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் ஆகியோர் நடவடிக்கையெடுத்தனர்.

அதற்கான கடிதங்களும் அவர்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் தலைமை மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில் மணிவண்ணனும் இனிமேல் இணைந்து செயற்பட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.