பாரதிபுரத்தில் மக்களால் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரத்துடன் நீண்ட காலமாக வருடாவருடம் வயல் விதைப்பு செய்யப்படுகின்ற வயல்களை சட்டவிரோதமான முறையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் எல்லையிடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
இன்று குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சென்று பார்வையிட்டார்.
குறித்த சந்திப்பில் வட்டார பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுமாரன், கட்சியின் அமைப்பாளர்கள் சுபாஸ், யசோதரன் ஞானம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் காட்சிக்கு உரித்துடையோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.