நீங்கள் பயணிக்கும் பேருந்து இலக்கங்களை நினைவில் வைத்திருங்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

நீங்கள் பயணிக்கும் பேருந்து இலக்கங்களை நினைவில் வைத்திருங்கள்!


பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் தாம் பயணிக்கும் பேருந்துகளின் இலக்கத்தை நினைவில் வைத்திருக்குமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், பேலிகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய ஏராளமான நோயாளிகள் பொது போக்குவரத்தில் பயணம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. எனினும், பேருந்து இலக்கங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. எதிர்காலத்தில் தடமறிய பேருந்து இலக்கங்களை நினைவில் வைத்திருப்பது உதவியாக இருக்கும்.

பஸ் உரிமையாளர்கள் பயணிகளின் வசதிக்காக பேருந்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் வாகன இலக்கத்தகட்டு எண்களைக் காட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.