முன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியமளிக்கிறார் மணிவண்ணன்: நீக்கத்திற்கு எதிராக வழக்கு ! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

முன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியமளிக்கிறார் மணிவண்ணன்: நீக்கத்திற்கு எதிராக வழக்கு !தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டதற்கு எதிராக , சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழக்கு தொடரவுள்ளார் . பெரும்பாலும் அடுத்த வார ஆரம்பத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது . 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களில் ஒருவரான வி.மணிவண்ணன் அண்மையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் , உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்டார் . 

கட்சியில் மக்கள் செல்வாக்குள்ள இளம் தலைவர்களில் ஒருவரான வி.மணிவண்ணன் தொடர்பில் , கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரனுக்கு ஏற்பட்ட போட்டி மனப்பான்மை வளர்ந்து , மணிவண்ணனை நீக்குமளவிற்கு விஸ்பரூபமெடுத்திருந்தது , மணிவண்ணன் நீக்கம் விவகாரம் கட்சி மேற்கொண்ட பிழையான முடிவு என்பதை கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள் , ஆதரவாளர்கள் பலரும் கட்சி தலைமையிடம் கூறிய போதும் , கட்சித் தலைமை அதை கணக்கிலெடுக்கவில்லை . 

முறையான மத்தியகுழு இல்லாமல்- குடும்ப கட்சியை போல- விரும்பிய உறுப்பினர்களை அழைத்து , கட்சி தலைவர் , செயலாளர் சொல்வதை தீர்மானமாக

எழுதிவிட்டு , மத்தியகுழு முடிவென அறிவிக்கும் வழக்கம் முன்னணிக்குள் உண்டு . இதேவிதமான " ஆமாம் சாமிகளை " அழைத்து மத்தியகுழுவென்ற பெயரில் , மணிவண்ணனை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது . ஆனால் , மணிவண்ணனை தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்குவது , கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவது என எடுக்கப்பட்ட இரண்டு முடிவுகளயும்- இரண்டு வெவ்வேறு மத்தியகுழுக்கள் எடுத்தன . அதாவது , வேறுவேறு நபர்களை கொண்ட மத்தியகுழு கூடி இந்த முடிவுகளை எடுத்தன . 

கட்சிக்கு அதிகமாக ஆட்களை எடுத்து , கட்டமைப்பை உருவாக்கினால- தனது தலைமை பதவியையும் வேறு யாராவது கைப்பற்றி விடுவார்கள் என்பதால் , சிறிய குழுவைப் போலவே இயங்கலாமென கட்சியின் ஆரம்ப காலத்தில் கஜேந்திரகுமார் விரும்பியிருந்ததை மணிவண்ணன் அம்பலப்படுத்தியிருந்தார் . கட்சியின் கொள்கை முடிவுகளை , கஜேந்திரகுமாரின் தாயார் எடுக்க , அதை கஜேந்திரகுமார் செயற்படுத்தும் , " அம்மா பிள்ளையாக " மட்டுமே அவரிருக்கிறார் என்ற நீண்டகால விமர்சனமும் உள்ளது . இதனால்தான் எந்த ஜனநாயகரீதியிலான அடிப்படையிலான கட்டமைப்புக்கள் இல்லாமல் , " கோவிந்தா , கோவிந்தா " என திரியும் ஒரு கும்பல் பாணி கட்டமைப்பை முன்னணி பேணியது .

முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்து , கட்டமைப்பு ரீதியாக முன்னணியை வளர்க்க வேண்டுமென உள்ளுக்குள்ளேயே நீண்டகாலமாக போராடிய மணிவண்ணனிற்கு , இந்த உள் விவகாரங்கள் நன்றாகவே தெரியும் . கட்சியின் கட்டமைப்பின்மையின் மத்தியில்- என்னை அந்த ஊரில் பெண் கேட்டார்கள் , இந்த ஊரில் பெண் கேட்டார்கள் பாணியில்- பில்டப் பண்ணிய முன்னணி , மத்தியகுழு முடிவெடுத்தது , ஒழுக்காற்றுகுழு முடிவெடுத்தது என அறிவித்தபடியிருந்தது . 

முன்னணி கூறிய இந்த குழுக்களில் யார் அங்கம் வகிப்பது , கடந்த 10 கூட்டங்களில் இந்த குழுக்களில் அங்கம் வகித்தது யார் , யாப்பின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு இயங்கியதா என முன்னணிக்கு குடைச்சல் கொடுக்கும் பல சட்ட விடயங்கள் முன்னணிக்கு எதிராக திரும்பும் என்பதால் , அவற்றை மையப்படுத்தி மணிவண்ணன் வழக்கு தொடரவுள்ளார் .