மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியதில் நடுவீதியில் பலியான இளைஞன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியதில் நடுவீதியில் பலியான இளைஞன்!


முல்லைத்தீவு முள்ளியவளை ஆலடி பகுதியில் இன்று (25) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை நகர் பகுதியில் இருந்து முள்ளியவளை இரண்டாம் வட்டாரம் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவரே உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை ஆலடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் இரண்டாம் வட்டாரம் முள்ளியவளை யைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாகிய 21 வயதுடைய மகேந்திரன் கவிஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.