தூர இட சேவைகளை நிறுத்தியது இ.போ.ச! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தூர இட சேவைகளை நிறுத்தியது இ.போ.ச!


கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அனைத்து நீண்டதூர பேருந்துகளின் சேவைகளையும் இலங்கை போக்குவரத்து சபை நிறுத்தியுள்ளது.

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால், கொழும்பிலிருந்து புறப்பட்ட அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளுடன் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இ.போ.ச தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும், உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவைகள் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாகாணத்திற்குள் பேருந்து சேவை தொடர்ந்து செயற்படும். சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பேருந்துகளை இயக்க கடுமையான திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்