மதங்களிற்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார் என குறிப்பிட்டு, பத்தரமுல்ல பகுதியில் பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
43 வயதான அந்த பெண், கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை குறிப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை பதிவேற்றியிரு்தார்.
குற்றவியல் புலனாய்வு துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
பௌத்த, கிறிஸ்தவ மதங்களிற்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளதாகவும், சந்தேகநபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், இனவெறி அல்லது மத வெறியை தூண்டும் தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு டி.ஐ.ஜி அஜித் ரோஹன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.