இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள் என விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பில், இன்று இரண்டாவது தடவையாக அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
பௌத்த பிக்கு ஒருவரால் குற்றப் புலனாய்ப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனிடம் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளார்கள்.
சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
2019 நவம்பர் 14 ஆம் திகதி விக்னேஸ்வரன் வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கையில், இலங்கையின் மூத்தகுடிகள் தமிழர்களே என குறிப்பிட்டிருந்தார்.
அந்த அறிக்கை இன நல்லுறவைக் கெடுப்பதாக இருக்கின்றது எனவும், சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றது எனவும் பௌத்த பிக்கு ஒருவர், செய்த முறைப்பாட்டையடுத்து, கடந்த பொதுத்தேர்தலிற்கு முன்னதாக விக்னேஸ்வரன் முதலாவது தடவையாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
இன்று இரண்ாடாவது தடவையாக விசாரிக்கப்பட்டார்
No comments
Note: Only a member of this blog may post a comment.