பேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு!


கல்பிட்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இன்று (24) பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கல்பிட்டி, கண்டகுளியை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கல்பிட்டியிலிருந்து பேலியகொட மீன் சந்தைக்கு மீன்களை கொண்டு செல்லும் லொறியில் இவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

பேலியகொட மீன்பிடி துறைமுகத்துடன் தொடர்புடையவர்கள் கல்பிட்டி பகுதியில் அதிகமாக உள்ளதால், பலர் பிசிஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழந்த நபரையும் பிசிஆர் பரிசோதனைக்காக அழைத்து வந்த போது திடீரென தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை